march 3rd - A tribute to Sujatha
It may be a surprise to many that i choose to devote this week to one of my favorite writer who instilled the habit of reading or atleast wrote interestingly for us to create the reading habit ..
News will continue in subsequent publishes...
read on
For most people like me, in my generation, he was the main reason we can claim to have read literary work in Tamil.
Personally, for someone who started off reading Perry Mason at Std VI, his conceptualization skill and writing style was the sole reason that attracted me to read Tamil fiction.
Besides writing, he was truly multi faceted.
A gifted Engineer - ECI owes a lot to him. He was the Chief of the Group at BEL that devised the EVM (Electronic Voting Machine)
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைக்கு காத்திருந்து விகடன் வந்தவுடன் பிறருக்கு தெரியாமல் அதை லவட்டி, பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகுமுன் சுஜாதா கதையை படித்தால்தான்( சில சமயம் அந்த 20 – 30 நிமிடங்களுக்குள் 2- 3 முறை படித்ததும் உண்டு) உயிர் இருக்கும் என்றிருந்த காலம் அது.கணேஷ், வசந்த் தான் அன்றைய நேரத்து ஹீரோக்கள்!அந்த கணங்களில் அந்த வார்த்தைகள் தந்த அந்த சுகம் என்றும் மறக்க முடியாது.அவருக்கு 45- 50 வயதான நேரத்தில்தான் அவர் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். என்றாலும் என்ன ஒரு இளமை அவரது எழுத்தில். என்ன ஒரு வேகம். என்ன ஒரு துடிப்பு. என்ன ஒரு குறும்பு. எல்லாவற்றிற்கும் மேலாக என்ன ஒரு freshness. அதிகம் build-up இல்லாமல், ரொம்பவும் feel விடாமல் மிகவும் இயல்பாக, பேச்சு நடையில் இருந்த அந்த எழுத்துக்கள், தூய இலக்கணத் தமிழ் மட்டுமே என்று அடம் பிடிக்காத சுபாவம் - அன்றைய வாசகர்களை கவர்ந்ததில் எந்த ஒரு வியப்பும் இல்லை. இன்று வரை அதே effect இருப்பதிலும் ஆச்சர்யம் இல்லை.அந்த படைப்புகள் அனைத்தும் எப்பொழுது எழுதப்பட்டிருந்தாலும், இப்பொழுதும் அதே உணர்வை தருவதுதான் சுஜாதாவின் தனிச்சிறப்பு.விஞ்ஞானம் புரிய வேண்டுமானால் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற ஒரு நிலைமையை உடைத்தது அவரின் மற்றுமொரு பெரும் சிறப்பு.விஷயம் தெரிந்தவர்கள், சொல்லும் விதத்தில் சொன்னால் சொல்லும் விஷயம் எதுவாக இருந்தாலும், எந்த மொழியில் இருந்தாலும் யாருக்கும் புரியும் என்று பலருக்கு முதலில் புரிய வைத்தது சுஜாதா. வாசகர்களை உணர்வுபூர்வமாக கவர்ந்தது மட்டுமல்லாமல் அவர்களை அறிவுபூர்வமாகவும் வளப்படுத்த முனைந்தது, அதில் முற்றிலும் வெற்றியும் பெற்றது சுஜாதாவின் மிகப்பெரிய சாதனை.
தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் வாசித்திருக்க கூடிய மிக சில படைப்பாளர்களில் சுஜாதாவும் ஒருவர் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.சுஜாதாவின் அந்த ஒரு தனித்துவ எழுத்து நடைதான் இன்று நம்மில் பலரை effectively bi-lingual (proficiency in both Thamizh and English) ஆக ஆக்கியிருப்பதின் ஒரு முக்கிய காரணம் என்றுகூட நினைக்கத் தூண்டுகிறது.அவரின் படைப்புகளை விவாதிப்பதே ஒரு பெருமை கொள்ளும் விஷயமாக ஆனது. இதனால், படித்தவர்கள் பெருமிதம் கொள்வதும், படிக்காதவர்கள் படிக்கத் துடிப்பதும் வேடிக்கையான ஒரு வாடிக்கை.
நம்மை போல பல கோடியினரை பற்பல கணங்களில் கவலை எல்லாம் மறந்து சந்தோஷப் படுத்தியது சுஜாதாவின் படைப்புகள்.அவர் மறைந்து விட்டாலும் நம்மையும், இன்னும் படிக்கபோகும் பல கோடியினரையும் அவர் விட்டுவிட்டு சென்றுள்ள எல்லா படைப்புகளும் - எத்தனை முறை திரும்பத்திரும்ப படித்தாலும் - ஒவ்வொரு முறையும் புதிதாக படிப்பது போன்ற உணர்வோடு
சந்தோஷப்படுத்தும்.....
மெய்சிலிர்க்க வைக்கும்.......
கண் கலங்க வைக்கும்.......
உத்வேகப்படுத்தும்......
ஊக்கப்படுத்தும்..........
என்பது மட்டும் சத்தியம்ஸ்வதம்........சர்வ நிச்சயம்.......
Comments